டென்னிஸ்

ஐ.டி.எப். மகளிர் ஓபன்: கொரிய வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு யமளப்பள்ளி முன்னேற்றம்

6-2, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் கொரிய வீராங்கனையை யமளப்பள்ளி வீழ்த்தினார்.

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஐ.டி.எப். மகளிர் ஓபன் டபிள்யூ100 டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியா சார்பில் சகஜா யமளப்பள்ளி, கொரியாவை சேர்ந்த வீராங்கனை தயியோன் பேக் என்பவருக்கு எதிராக விளையாடினார்.

இந்த போட்டியில், 6-2, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் கொரிய வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு யமளப்பள்ளி முன்னேறி இருக்கிறார்.