Image Tweeted By RolexPMasters 
டென்னிஸ்

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் வெஸ்லி கூல்ஹோப்- நீல் ஸ்குப்ஸ்கி ஜோடி சாம்பியன்

வெஸ்லி கூல்ஹோப் மற்றும் நீல் ஸ்குப்ஸ்கி ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.

பாரிஸ்,

பாரிஸ் மாஸ்டர்ஸ் 1000 ஏடிபி டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கடந்த மாத இறுதியில் தொடங்கியது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் வெஸ்லி கூல்ஹோப் (நெதர்லாந்து) மற்றும் நீல் ஸ்குப்ஸ்கி (இங்கிலாந்து ) ஜோடி 7-6, 6-4 என்ற செட் கணக்கில் இவான் டோடிக் மற்றும் ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியை வீழ்த்தி பாரிஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.