டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன்; மேடிசண் கீஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மேடிசண் கீஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தினத்தந்தி

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ள இந்த டென்னிஸ் திருவிழாவில் அமெரிக்காவை சேர்ந்த 26 வயதான மேடிசண் கீஸ் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

காலிறுதி போட்டியில் அவர் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவை அபாரமாக வீழ்த்தினார்.

தற்போது தரவரிசை பட்டியலில் 51வது இடத்தில் இருக்கும் அவர் அடுத்து வரும் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் ஆஸ் பார்ட்டி அல்லது ஜெஸ்ஸிகாவை எதிர்கொள்ள உள்ளார். அப்போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு பின் அவர் கிராண்ட்ஸ்லாம் தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அவர் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு