டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் குணேஸ்வரன் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் குணேஸ்வரன் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

தினத்தந்தி

புனே,

3-வது மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 122-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஜெர்மனி வீரர் யான்னிக் மாடெனை சந்தித்தார். பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் குணேஸ்வரன் 7-6 (7-4), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஜூன் காதே 2-6, 4-6 என்ற நேர்செட்டில் செக்குடியரசு வீரர் ஜிரி வெஸ்லியிடம் தோல்வி கண்டு வெளியேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) இணை 6-2, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் திவிஜ் சரண் (இந்தியா)-அர்டெம் யூரிவிச் சிடாக் (நியூசிலாந்து) ஜோடியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?