கோப்புப்படம்  
டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர்கள் மனாஸ், நாகல் தோல்வி

5-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது.

தினத்தந்தி

புனே,

5-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏ.டி.பி. தொடரான இதில் முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் 15 வயதான மனாஸ் தாமே 2-6, 4-6 என்ற நேர் செட்டில் உலகின் 113-ம் நிலை வீரர் அமெரிக்காவின் மைக்கேல் மோவிடம் தோல்வியை தழுவினார்.

பின்னர் 24 வயதான மைக்கேல் மோ கூறுகையில், மனாஸ் தாமே இந்த அளவுக்கு போராட்டம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது' என்று பாராட்டினார்.

மற்றொரு இந்திய வீரர் சுமித் நாகலும் முதல் சுற்றை தாண்டவில்லை. 2 மணி 24 நிமிடங்கள் மல்லுகட்டிய நாகல் 4-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் பிலிப் கிரஜினோவிச்சிடம் (செர்பியா) வீழ்ந்தார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை