டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் போபண்ணா, ராம்குமார் இறுதி போட்டிக்கு தகுதி

மராட்டிய ஓபன் டென்னிசில் இரட்டையர் இறுதி போட்டிக்கு இந்தியாவின் போபண்ணா மற்றும் ராம்குமார் முன்னேறியுள்ளனர்.

தினத்தந்தி

புனே,

மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் பலேவாடி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. இதில், ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் பிரான்ஸ் நாட்டின் சாதியோ தவும்பியா மற்றும் பேபியன் ரிபோல் ஆகியோரை எதிர்த்து விளையாடினர்.

இந்த அரையிறுதி போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 27 நிமிடங்கள் நீடித்தது. இதில், 4-6, 6-4, 12-10 என்ற செட் கணக்கில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் லூக் சாவில்லே மற்றும் ஜான் பேட்ரிக் ஆகியோரை எதிர்த்து இறுதி போட்டியில் இந்திய வீரர்கள் விளையாட உள்ளனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை