டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி கால்இறுதிக்கு தகுதி

மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி கால்இறுதிக்கு தகுதிபெற்றது.

தினத்தந்தி

புனே,

3-வது மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சசிகுமார் முகுந்த் 2-6, 6-7 (7-9) என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் தாரோ டேனியலிடம் தோல்வி கண்டு வெளியேறினார். 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செக்குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி 7-6 (7-5), 6-4 என்ற நேர்செட்டில் இத்தாலி வீரர் சால்வடோர் காருசோவை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார். இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ராம்குமார்-புரவ் ராஜா ஜோடி 7-6 (8-6), 6-3 என்ற நேர்செட்டில் சுமித் நாகல் (இந்தியா)-இகோர் ஜெராசிமோவ் (பெலாரஸ்) இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்