அகாபல்கோ,
மெக்சிகோ நாட்டின் அகாபல்கோ நகரில் மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான 35 வயது நடால் மற்றும் பிரிட்டனை சேர்ந்த கேமரூன் நார்ரி ஆகியோர் விளையாடினர்.
இந்த போட்டியில், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கேமரூனை வீழ்த்தி ரபேல் நடால் பட்டம் வென்றுள்ளார். அகாபல்கோவில் நடாலுக்கு இது 4வது சாம்பியன் பட்டம் ஆகும். நடப்பு 2022ம் ஆண்டில் நடாலின் 3வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.