Image Courtesy: AFP  
டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்; அல்காரஸ், ஸ்வெரேவ், மெத்வதேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

மியாமி,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்களான கார்லஸ் அல்காரஸ், அலெக்ஸ்சாண்டர் ஸ்வெரேவ், டேனியல் மெத்வதெவ் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கார்லஸ் அல்காரஸ் சக நாட்டவரான ராபர்டோ கார்பலேஸ் பேனாவை எதிர்கொண்டார். இதில் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ராபர்டோ கார்பலேஸ் பேனாவை வீழ்த்தி கார்லஸ் அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸ்சாண்டர் ஸ்வெரேவ் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமை எதிர்கொண்டார். இதில் ஸ்வெரேவ் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதையடுத்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீரரான டேனியல் மெத்வதேவ் ஹங்கேரியின் மார்டன் புசோவிக்ஸை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் மெத்வதேவ் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில்மார்டன் புசோவிக்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு