டென்னிஸ்

மியாமி டென்னிஸ்: ஹாலெப், யுகி பாம்ப்ரி வெற்றி

மியாமி டென்னிஸ் போட்டியில் ஹாலெப், யுகி பாம்ப்ரி வெற்றி பெற்றனர்.

தினத்தந்தி

மியாமி,

மியாமி சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 3-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஓசியன் டோடினை (பிரான்ஸ்) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 107-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 7-5, 6-3 என்ற நேர்செட்டில் 75-ம் நிலை வீரர் மிர்சா பாசிச்சை (போஸ்னியா) வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்