image courtesy:AFP 
டென்னிஸ்

மான்டி கார்லோ டென்னிஸ்: நம்பர் 1 வீரர் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஜோகோவிச் காலிறுதி ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினார் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

தினத்தந்தி

மொனாக்கோ,

களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் (செர்பியா), லோரென்சோ முசெட்டி (இத்தாலி) உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-5 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று  காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

இவர் தனது காலிறுதி ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினார் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு