Image Courtesy: AFP  
டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பட்டம் வெல்வேன் - நடால் நம்பிக்கை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பட்டம் வெல்வேன் என நம்பிக்கை உள்ளதாக ரபேல் நடால் கூறியுள்ளார்.

தினத்தந்தி

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் மீண்டும் பட்டம் வெல்வேன் என்று ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.

2022-ல் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் நடால் பட்டம் வென்றார். தற்போது போட்டியில் கலந்து கொள்ள அவர் ஆஸ்திரேலியா வந்துள்ளார். இந்தப் போட்டி வரும் ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நடால் கூறியதாவது,

மீண்டும் ஆஸ்திரேலிய ஓபனில் நான் பட்டம் வெல்வேன். போட்டிக்காக நான் விரைவிலேயே இங்கு வந்துவிட்டேன். கடந்த சில நாட்களாக பயிற்சி மேற்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து