டென்னிஸ்

டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக முன்னணி வீரர் மெத்வதேவ் அறிவிப்பு

டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக உலகின் முன்னணி வீரர் மெத்வதேவ் அறிவித்துள்ளார்

தினத்தந்தி

மாஸ்கோ,

டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக முன்னணி வீரர் மெத்வதேவ் அறிவித்துள்ளார். டென்னிஸ் தரவரிசையில் 2-ஆம் இடம் வகிக்கும் மெத்வதேவ் ரஷ்யாவை சேர்ந்தவர். பார்முலா 1 கார் பந்தயத்துக்கான பயிற்சியை தொடங்கி இருப்பதாகவும் மெத்வதேவ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிப்போட்டியில் ரபேல் நடாலிடம் தோல்வி அடைந்து சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை மெத்வதேவ் இழந்தார். முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று இருந்தார்.

25 வயதே ஆன இளம் வீரர் மெத்வதேவ் டென்னிஸ் போட்டிகளுக்கு முழுக்கு போட்டிருப்பது உலகம் முழுவதும் உள்ள டென்னிஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை