Image Tweeted By atptour 
டென்னிஸ்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் ஜோகோவிச்- காஸ்பர் ரூட் பலப்பரீட்சை

'ஏடிபி பைனல்ஸ்' இறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச்- காஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

தினத்தந்தி

துரின்,

உலக தரவரிசையில் முன்னணியில் இருக்கும் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்கும் 'ஏ.டி.பி. பைனல்ஸ்' எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் கடந்த 13-ஆம் தேதி தொடங்கியது. குரூப் சுற்று முடிவில் நோவக் ஜோகோவிச், டெய்லர் பிரிட்ஸ், காஸ்பர் ரூட் மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர்.

இதில் முதல் அரையிறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச் (செர்பியா)- டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் ஜோகோவிச் 7-6 (7-5) , 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார். இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது அரையிறுதியில் ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி நார்வேயின் காஸ்பர் ரூட் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்த நிலையில் இன்று இரவு நடைபெறும் இறுதி போட்டியில் நோவக் ஜோகோவிச்- காஸ்பர் ரூட் ஆகியோர் சாம்பியன் பட்டத்துக்கான பலப்பரீட்சையில் மோதுகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு