மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கும், போட்டியை காண வரும் ரசிகர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை போல் இல்லாமல் இந்தாண்டு 100 சதவீத இருக்கைகளிலும் ரசிகர்கள் அமர அனுமதிக்கப்பட்டுள்ளதால் மைதானத்தில் இருக்கும் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது
இந்தசூழலில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மெல்போர்னில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று போட்டிக்கான இயக்குனர் கிரேக் டிலெ மீண்டும் ஒரு முறை தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தினாரா? இல்லையா? என்பதை தெரிவிக்க மறுத்து வரும் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபனை வென்றவருமான நோவக் ஜோகோவிச்சுக்கு (செர்பியா) மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய டென்னிஸ் வாரியத்தின் இந்த அதிரடி முடிவால், தடுப்பூசி செலுத்தினாரா, இல்லையா என்பதை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் ஜோகோவிச் உள்ளார்.