image courtesy; twitter/@WTA 
டென்னிஸ்

பலேர்மா மகளிர் ஓபன் டென்னிஸ்; ஜெங் கின்வென் சாம்பியன்

இறுதிப் போட்டியில் ஜாஸ்மின் பயோலினியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

தினத்தந்தி

பலேர்மா,

மகளிருக்கான பலேர்மா ஓபன் டென்னிஸ் தொடர் இத்தாலியில் நடைபெற்றது. இதில் நடந்த இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஜெங் கின்வென் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பயோலினி உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இரு செட்டுக்களை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். இதனால் மூன்றாவது செட் பரபரப்புக்கு உள்ளானது. வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை ஜெங் கின்வென் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர் 6-4,1-6 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இந்த சாம்பியன் பட்டத்தை வெல்லும் 11-வது சீன வீராங்கனை ஜெங் கின்வென் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்