image courtesy; AFP 
டென்னிஸ்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; டொமினிக் தீம் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்..!!

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

பாரீஸ் ,

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி வரும் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த டொமினிக் தீம், சுவீஸ் நாட்டை சேர்ந்த வாவ்ரிங்கா உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த தீம் , பின்னர் அதிரடியாக விளையாடி அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

2 மணி நேரம் 31 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் தீம் 3-6, 6-3 மற்றும் 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். தீம் தனது அடுத்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஹோல்கர் ரூன் உடன் மோத உள்ளார். 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு