டென்னிஸ்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பட்டம் வென்றார், ஜாக் சோக்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸில் பட்டம் வென்ற ஜாக் சோக் இந்த வெற்றியின் மூலம் டாப்-10 இடத்திற்குள் நுழைகிறார்.

தினத்தந்தி

பாரீஸ்,

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ஜாக் சோக் 5-7, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பிலிப் கிராஜினோவிச்சை (செர்பியா) வீழ்த்தி பட்டத்தை தனதாக்கினார். ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் போட்டியில் அவர் பட்டம் வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் 1999-ம் ஆண்டு ஆந்த்ரே அகாசிக்கு பிறகு பாரீஸ் போட்டியில் வெற்றி கண்ட முதல் அமெரிக்க வீரரும் இவர் தான்.

இதன் மூலம் லண்டனில் நடக்கும் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் உலக டூர் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் 25 வயதான ஜாக் சோக் தகுதி பெற்றார். தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள ஜாக் சோக் இந்த வெற்றியின் மூலம் டாப்-10 இடத்திற்குள் நுழைகிறார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு