Image Courtesy: @RolexPMasters 
டென்னிஸ்

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிக் சின்னெர்

முதலிடத்தில் இருந்த ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

தினத்தந்தி

பாரீஸ்,

பாரீஸ் ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி பிரான்சில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ஜானிக் சிம்னெர் (இத்தாலி) 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம்மை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் போட்டியில் சின்னெர் கைப்பற்றிய 5-வது பட்டம் இதுவாகும். அவர் ரூ.9 கோடியை பரிசாக அள்ளினார்.

இந்த வெற்றியின் மூலம் 24 வயதான ஜானிக் சிம்னெர் உலக தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார். இதுவரை முதலிடத்தில் இருந்த ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்