மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்த டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்று வரும் இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் தரவரிசையில் 2ம் நிலை வீரரான டேனில் மெட்வெடேவ்(ரஷியா) ஸ்பெயினின் ரபேல் நடாலை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த போட்டியில், முதல் மற்றும் இரண்டாவது செட்டை மெட்வடேவ் கைப்பற்றிய நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது செட்களை நடால் வென்றார்.
இதனால் சாம்பியன் ஆகப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் ஐந்தாவது செட் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அதில் வெற்றி பெற்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லப் போவது யார் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.