டென்னிஸ்

ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி - நாளை தொடக்கம்

ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டியில் 9 நாடுகளைச் சேர்ந்த 56 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

9 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு டென்னிஸ் கழக தலைமை செயல் அலுவலர் ஹிதேன் ஜோஷி, நாளை முதல் 9-ந்தேதி வரை மொத்தம் 8 நாட்களுக்கு போட்டி நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும் இந்த தொடரில் நெதர்லாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜப்பான், உக்ரைன், அமெரிக்கா, கொரியா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 56 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 6 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த தொடரில் இரட்டையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி ஏப்ரல் 8-ந்தேதியும், அதனைத் தொடர்ந்து ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி 9-ந்தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை