டென்னிஸ்

ரோஜர் பெடரர் பங்கேற்கும் கடைசி டென்னிஸ் தொடர் - லண்டனில் நாளை தொடக்கம்

ரோஜர் பெடரர் பங்கேற்கும் கடைசி தொடரான லேவர் கோப்பை டென்னிஸ் தொடர் லண்டனில் நாளை தொடங்குகிறது.

தினத்தந்தி

லண்டன்,

சர்வதேச டென்னில் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

அதன்படி அவர் பங்கேற்கும் கடைசி தொடரான லேவர் கோப்பை டென்னிஸ் தொடர் லண்டனில் நாளை தொடங்குகிறது. இதில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்திய நேரப்படி, நாளை மாலை 5 மணியளவில் இந்த போட்டி தொடங்குகிறது.

உலக அணியில் இடம்பெற்றுள்ள ரோஜர் பெடரர், இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாட உள்ளார். இந்த தொடருடன் ரோஜர் பெடரர் ஓய்வு பெற இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்