டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் போபண்ணா, ராம்குமார் மகுடம் சூடினர்

மராட்டிய ஓபன் டென்னிசில் இரட்டையர் இறுதி போட்டியில் இந்தியாவின் போபண்ணா மற்றும் ராம்குமார் பட்டம் வென்றனர்.

தினத்தந்தி

புனே,

மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் பலேவாடி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. இதில், ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் ஆஸ்திரேலிய நாட்டின் லூக் சாவில்லே மற்றும் ஜான் பேட்ரிக் ஸ்மித் ஆகியோரை எதிர்த்து விளையாடினர்.

இந்த இறுதி போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 45 நிமிடங்கள் நீடித்தது. இதில், 7-6, 3-6, 6-10 என்ற செட் கணக்கில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினர்.

இதன்மூலம், போபண்ணா வெல்லும் 21வது சர்வதேச டென்னிஸ் பட்டம் இது ஆகும். முன்னதாக இந்த ஆண்டு அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் பட்டத்தை வென்ற நிலையில் இப்போது இரண்டாவது பட்டத்தை கைப்பற்றினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்