டென்னிஸ்

ஆக்லாந்து ஓபன் டென்னிசில் இரட்டையர் பிரிவில் செரீனா, வோஸ்னியாக்கி இணைகிறார்கள்

ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டியின், இரட்டையர் பிரிவில் செரீனா, வோஸ்னியாக்கி ஆகியோர் இணைய உள்ளனர். .

தினத்தந்தி

ஆக்லாந்து,

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி அடுத்த மாதம் மெல்போர்னில் நடக்கும் (ஜனவரி 20-ந்தேதி முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை) ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இந்த நிலையில் அதற்கு முன்பாக நியூசிலாந்தில் நடக்கும் ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டியில் (ஜனவரி 6 முதல் 12 வரை) பங்கேற்க முடிவு செய்துள்ளார். அந்த போட்டியில் அவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் தனது தோழியும், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளருமான செரீனா வில்லியம்சுடன் (அமெரிக்கா) இணைந்து விளையாட இருப்பதாக அறிவித்துள்ளார். செரீனா- வோஸ்னியாக்கி ஜோடியாக ஆட இருப்பது இதுவே முதல் முறையாகும்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து