டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியஸ்ம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

தினத்தந்தி

நியூயார்க்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அரையிறுதி ஆட்டத்தில் பெலாராஸ் நாட்டைச்சேர்ந்த விக்டோரியா அஸெரன்காவை எதிர்த்து விளையாடினார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த தோல்வியின் மூலம் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் செரீனாவின் கனவு தகர்ந்தது. வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நயோமி ஒசாகா எதிர்த்து அஸரென்கா விளையாட உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து