Image Courtesy: AFP  
டென்னிஸ்

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்: ரபேல் நடால் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

தினத்தந்தி

ஸ்வீடன்,

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், பிரிட்டன் வீரரான கேமரூன் நோரி உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கேமரூன் நோரியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் நடால் அர்ஜென்டினாவின் மரியானோ நவோன் உடன் மோத உள்ளார்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு