ஆமதாபாத்,
8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி ஆமதாபாத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் - புனே ஜாக்குவார்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் 9-6 என்ற கணக்கில் புனே ஜாக்குவார்சை வீழ்த்தியது.
இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் யு மும்பா- தபாங் டெல்லி அணிகள் சந்திக்கின்றன.