image courtesy; AFP  
டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்...!! பெகுலா அதிர்ச்சி தோல்வி..!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸ் நாட்டை சேர்ந்த அரினா சபலென்கா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். சபலென்கா காலிறுதியில் சீனாவின் கின்வென் ஜெங்கை எதிர்கொள்கிறார்.

இதில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா சக நாட்டவரான மேடிசன் கீஸ் உடன் மோதினார். இதில் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி மேடிசன் கீஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். கீஸ் காலிறுதியில் செக் நாட்டை சேர்ந்த வாண்ட்ரோஸோவா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். அதிர்ச்சி தோல்வி அடைந்த பெகுலா தொடரில் இருந்து வெளியேறினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை