Image Courtesy: AFP  
டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜெர்மனியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்வெரேவ் 6-7 (2-7), 6-3, 4-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் டெய்லர் பிரிட்ஸிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்ற டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது