டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முச்சோவா, நோஸ்கோவா

இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது.

லண்டன்,

விம்பிள்டன் டென்னிசில் செக்குடியரசு வீராங்கனைகள் முச்சோவா, நோஸ் கோவா முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

கரோலினா -கோகோ காப்

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த அரையிறுதியில் செக்குடியரசின் கரோலினா முச்சோவா, அமெரிக்காவின் கோகோ காப்புடன் மோதினார். இதில் முச்சோவா, 6-2, 1-6, 7-6 (12-10) என்ற செட் கணக்கில் கோகோ காப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

முச்சோவா- நோஸ்கோவா

மற்றொரு அரையிறுதியில் செக்குடியரசின் லின்டா நோஸ் கோவா 6-4 6-4 என்ற நேர் செட்டில் உக்ரைனின் மார்த்தா கோஸ்ட்யுக்கை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இவர்களில் யார் வென்றாலும் அது அவர்களுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இருக்கும்.