டென்னிஸ்

உலக ஆண்கள் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் கேஸ்பர் ரூட்

உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கிரீன் பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் நார்வேயின் கேஸ்பர் ரூட்டுடன் மோதினார்.

தினத்தந்தி

துரின்,

உலக தரவரிசையில் டாப்-8 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று இரவு நடந்த கிரீன் பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ், 8-ம் நிலை வீரரான நார்வேயைச் சேர்ந்த கேஸ்பர் ரூட்டுடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் கேஸ்பர் ரூட் 2-6, 7-5, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ரூப்லெவிற்கு அதிர்ச்சி அளித்து 2-வது வெற்றியைப் பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

இந்த நிலையில் கிரீன் பிரிவின் அரைஇறுதி ஆட்டத்தில் கேஸ்பர் ரூட், ரஷிய வீரர் டேனில் மெட்விடேவுடன் மோத இருக்கிறார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்