டென்னிஸ்

உலக ஆண்கள் டென்னிஸ்: அரை இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரினில் நடந்து வருகிறது.

துரின்,

உலக தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ள உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரினில் நடந்து வருகிறது.

நேற்று கிரீன் பிரிவில் நடந்த ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் மற்றும் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2 என்ற நேர்செட்டில் ஆந்த்ரே ரூப்லெவ்வை சாய்த்து 2-வது வெற்றியோடு அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த சீசனில் ஜோகோவிச் ருசித்த 50-வது வெற்றி இதுவாகும்.

இதற்கிடையே கிரீன் பிரிவில் இடம் பெற்று இருந்த தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து நேற்று விலகினார். அவருக்கு பதிலாக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரி சேர்க்கப்பட்டார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்