டென்னிஸ்

உலக டென்னிஸ்: பெடரருக்கு அதிர்ச்சி அளித்தார், கோபின்

ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று எனப்படும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

லண்டன்,

டாப்-8 வீரர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த போட்டியில் நேற்று நடந்த அரைஇறுதியில் 2-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 8-ம் நிலை வீரர் டேவிட் கோபினை (பெல்ஜியம்) எதிர்கொண்டார்.

1 மணி 45 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் 6 முறை சாம்பியனான பெடரர் 6-2, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதற்கு முன்பு டேவிட் கோபினை சந்தித்த 6 ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்த பெடரர், அவரிடம் முதல்முறையாக மண்ணை கவ்வி இருக்கிறார்.

இந்த போட்டிக்கு முதல்முறையாக தகுதி பெற்றிருந்த 26 வயதான டேவிட் கோபின், முதல் முயற்சியிலேயே இறுதிப் போட்டிக்கு வந்து வியக்க வைத்துள்ளார். இறுதி ஆட்டத்தில் டிமிட்ரோவ் (பல்கேரியா) அல்லது ஜாக் சோக் (அமெரிக்கா) ஆகியோரில் ஒருவரை கோபின் சந்திப்பார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்