டென்னிஸ்

போட்டியில் தோற்றதால், ஜோகோவிச்சுக்கு இரவு உணவு வாங்கித் தர வேண்டியிருந்தது - ஷரபோவா

ஒரு போட்டியில் தோற்றதால், ஜோகோவிச்சுக்கு இரவு உணவு வாங்கித் தர வேண்டியிருந்தது என மரிய ஷரபோவா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பாரீஸ்,

உலகின் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக வலம் வந்த ரஷிய புயல் மரிய ஷரபோவா சர்வதேச டென்னிசில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 32 வயதான ஷரபோவா 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளர் ஆவார்.

இந்தநிலையில், மரிய ஷரபோவா ஜோகோவிச் உடனான இன்ஸ்டாகிராம் நேரடி உரையாடலின் போது, ஷரபோவா கலப்பு-இரட்டையர் டையில் இருவரும் எதிரெதிராக இருந்த ஒரு போட்டியை குறித்து பேசினார். அதில், ஒருவேளை ஷரபோவாவை அவர் வென்றால், அவருக்கு இரவு உணவு வாங்கித் தர வேண்டும் என்று ஜோகோவிச் கூறியதை நினைவு கூர்ந்தார். சவாலை ஏற்ற ஷரபோவா, அந்தப் போட்டியை தோற்றதால், ஜோகோவிச்சுக்கு இரவு உணவு வாங்கித் தர வேண்டியிருந்தது. அந்த இரவு உணவின் போது, ஜோகோவிச் தனது ரசிகர் தருணத்தைக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார். மேலும் நான் இரவு உணவிற்கு என்னை ஏலம் எடுத்தது போல் இருந்தது, ஷரபோவா கூறியதும் இருவரும் சிரித்தனர்.

17 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவர், ஒரு கேமராவை வெளியே எடுத்து, உணவக ஊழியர்களிடம் இருவரின் படத்தையும் கிளிக் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்