விளையாட்டு

உலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி

உலக டூர் பேட்மிண்டன் போட்டியில், முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வியடைந்தார்.

குவாங்ஜோவ்,

டாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்ஜோவ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது முதலாவது ஆட்டத்தில் அகானே யமாகுச்சியை (ஜப்பான்) சந்தித்தார். 68 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் சிந்து 21-18, 18-21, 8-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். சிந்து அடுத்த லீக்கில் இன்று சீனாவின் சென் யூ பேவை எதிர்கொள்கிறார். அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் சிந்து கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்