சில்க் சுமிதா; ஸ்ரீ ரெட்டி 
சினிமா துளிகள்

சில்க் சுமிதா வேடத்தில் நடிக்கும் ஸ்ரீ ரெட்டி

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய தெலுங்கு நடிகை ஶ்ரீரெட்டி, மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் நடிக்க போவதாக அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஏற்கனவே சில்க் சுமிதா வாழ்க்கை த டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் படமாகி வெளியானது. இதில் சில்க் சுமிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். மேலும் அவள் அப்படித்தான் என்ற பெயரிலும் சில்க் சுமிதா வாழ்க்கையை படமாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் ஶ்ரீரெட்டியும் சில்க் சுமிதாவாக நடிக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஶ்ரீரெட்டி வெளியிட்டுள்ள வீடியோவில், நான் சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த படத்தை விளம்பர பட இயக்குனர் மது இயக்குகிறார். படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளியாக அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும்'' என்று பேசியுள்ளார். சில்க் சுமிதா 1980 மற்றும் 90-களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். பின்னர் திடீரென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்