சினிமா துளிகள்

வயதான நடிகருக்கு ஜோடியான ஸ்ருதிஹாசன்

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசன் அடுத்ததாக வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக லாபம் திரைப்படம் வெளியானது. தற்போது பிரபாஸுடன் இணைந்து சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தை அடுத்து பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கோபிசந்த் மாலினேனி இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக, கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் வெளியான 'க்ராக்' படத்தின் நாயகியாகவும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு