புதுச்சேரி

மாநில அளவிலான வினாடி-வினா போட்டி

ஏய்ட்ஸ் கட்டுப்ட்டு சங்கம் சாபில் மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

புதுச்சேரி

பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான எய்ட்ஸ் பற்றிய வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. 950-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் 12 பேர் அடங்கிய 6 குழுக்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. தொடர்ந்து இறுதிபோட்டி வேல்ராம்பட்டு சாரதா கங்காதரன் கல்லூரியில் நடந்தது.

கல்லூரி முதல்வர் உதயசூரியன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் சித்ராதேவி போட்டியை தொடங்கி வைத்தார். உதவி இயக்குனர் சேதுராமன், சாரதா கங்காதரன் கல்லூரி செந்நாடா மன்ற ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி கலந்து கொண்டனர். போட்டியை சென்னை ஐகோர்ட்டு வக்கீல் பால்ஜெயராஜ் நடத்தினார்.

போட்டியின் முடிவில் மகாத்மாகாந்தி பல் மருத்துவக்கல்லூரி மாணவி ஹர்ஷிதா, வில்லியனூர் கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் கல்லூரி மாணவி ராஜா ஸ்ரீ ஆகியோர் அடங்கிய குழு முதல் பரிசான ரூ.10 ஆயிரத்தை பெற்றது. மேலும் கலந்து கொண்ட மற்ற 5 குழுக்களுக்கும் தலா ரூ.2,000 வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி நடைபெறும் மண்டல அளவிலான 8 மாநிலங்கள் பங்குபெறும் வினாடி-வினா போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.