கரூர் 
மாவட்ட செய்திகள்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடந்தது.

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கள்ளப்பள்ளி ஊராட்சி கிராம சபை கூட்டம் லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது கள்ளப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அந்த பள்ளி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், கள்ளப்பள்ளி ஊராட்சிக்கும், சிந்தலவாடி ஊராட்சிக்கும் ஒரே ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம்தான் குடிநீர் ஏற்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது சில பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. இதனால் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று கூறினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.