கரூர் 
மாவட்ட செய்திகள்

எலி மருந்தை தின்று கல்லூரி மாணவர் தற்கொலை

கரூர் அருகே எலி மருந்தை தின்று கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்,

கல்லூரி மாணவர்

கரூர் அருகே உள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகன் கோகுல் சுப்புராஜ் (வயது 19). இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கோகுல் சுப்புராஜ் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளார். இதனால் சில நாட்களாக அவர் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கோகுல் சுப்புராஜ் எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார்.

தற்கொலை

இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரரூர் காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கோகுல் சுப்புராஜ் பரிதாபமாக இறந்தார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். கல்லூரி மாணவர் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.