மேலூர்,
மேலூர் அருகில் உள்ள நாவினிபட்டியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 50). எலக்ட்ரீசியன். இவருக்கு தீபா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கீழையூரில் இருந்து அட்டபட்டிக்கு செல்லும் ரோட்டில் ஒரு தனியார் கொட்டகையில் சிவக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்துக்கு வந்த கீழவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் இது குறித்து விசாரணை நடத்தினார். அப்போது இறந்த சிவகுமாரின் சட்டை பையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்திய கீழவளவு போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வண்ணாம்பாறைபட்டியை சேர்ந்த அர்ஜூனன் (43) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.