மாவட்ட செய்திகள்

தக்கலை அருகே கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை

தக்கலை அருகே கொத்தனார் விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டார்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே உள்ள குமாரகோவில் நடுத்தெருவை சேர்ந்தவர் மகாதேவன் (வயது 37), கொத்தனார். இவர் நேற்று தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி பகுதியில் சாலையோரம் விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மகாதேவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.