சினிமா துளிகள்

சிரஞ்சீவி ஜோடியாக சுருதிஹாசன்?

சுருதிஹாசன் நடித்த லாபம் படம் கடந்த மாதம் வெளியானது.

தினத்தந்தி

சுருதிஹாசன் நடித்த லாபம் படம் கடந்த மாதம் வெளியானது. மேலும் அவர் நடித்த 3 தெலுங்கு படங்கள், ஒரு இந்தி படம் ஆகியவையும் இந்த வருடத்தில் ரிலீசானது. தற்போது பிரபாஸ் ஜோடியாக சலார் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ரூ.150 கோடி செலவில் தயாராகும் சலார் படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் சிரஞ்சீவி ஜோடியாக புதிய படத்தில் நடிக்க சுருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவி தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் ஆச்சாரியா' படத்தில் நடிக்கிறார். இதில் காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். மோகன்ராஜா இயக்கும் லூசிபர் தெலுங்கு ரீமேக்கிலும் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களை முடித்த பிறகு வேதாளம்' தெலுங்கு ரீமேக்கான போலா ஷங்கர்' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்துக்கு பிறகு பாபி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்கத்தான் சுருதிஹாசனை முடிவு செய்துள்ளனர். இது சிரஞ்சீவிக்கு 154-வது படமாகும். இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்