சினிமா துளிகள்

சுருதிஹாசன் திருமணம்?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை சுருதிஹாசன் திருமணம் குறித்த கேள்விக்கு சாந்தனு ஹசாரிகா சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.

நடிகை சுருதிஹாசன் பல வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்ற தகவல் கொஞ்ச நாட்களாகவே உலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருமணம் குறித்த கேள்விக்கு சாந்தனு சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.

தனது வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்திருப்பவர் சுருதிஹாசன். மதுவுக்கு அடிமையாக இருந்ததையும் வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார். தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பிரபாஸின் சாலார் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. பாலகிருஷ்ணாவின் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர இந்தியில் சில படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில் திருமணம் குறித்து அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவிடம் கேட்டதற்கு, நாங்க இப்போ தான் டேட்டிங் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். சுருதி நடிகை என்பதை விட அவர் ஒரு இசைக்கலைஞர். இசைதான் எங்களை ஒன்றிணைத்தது. இசையுடன், ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறோம், இந்த இரண்டும் எங்களது ஆக்கபூர்வமான பயணம். எங்களுடைய படைப்புகள் குறித்து விவாதிக்கிறோம். அது எங்களை ஊக்கப்படுத்துகிறது. இதுதான் தற்போது எங்களுக்கு இடையே இருக்கும் உறவு நிலை. திருமணத்தை விட இதில் தான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.

ஆக, திருமணம் குறித்து சுருதியும் சரி அவரது காதலரும் சரி யோசிக்கவே இல்லை என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...