தமிழில், நாகார்ஜுனா ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்தவர் சுஷ்மிதா சென். அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆர்யா-2 என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
சுஷ்மிதா சென்னுக்கு 45 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் தன்னைவிட 16 வயது குறைந்த ரோஹ்மன் சால் என்ற விளம்பர பட நடிகரை 3 வருடமாக சுஷ்மிதா காதலித்து வந்தார். இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் பரவியது.
இந்த நிலையில் காதல் முறிந்து விட்டதாக சுஷ்மிதா சென் அறிவித்து உள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷ்மிதா சென் வெளியிட்டுள்ள பதிவில், ரோஹ்மனுடனான எனது காதல் உறவு முறிந்துவிட்டது. ஆனாலும் நண்பர்களாக இருப்போம், அன்பு தொடரும். நீண்டகால உறவு முடிவுக்கு வந்து விட்டது என்று கூறியுள்ளார்.