சினிமா துளிகள்

வேதாளம் ரீமேக்கில் இணைந்த தமன்னா

தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் தற்போது ‘போலா ஷங்கர்’ என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு போலா ஷங்கர் என பெயரிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் இணைந்து நடித்திருந்த தமன்னா, தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 11-ந் தேதி பூஜையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்