முன்னோட்டம்

டாணாக்காரன்

‘டாணாக்காரன்’ இந்திய திரையுலகில் இதுவரை வெளிவராத கதை சினிமா முன்னோட்டம்.

தினத்தந்தி

இந்திய திரையுலகில் இதுவரை வெளி வராத ஒரு கதையில், விக்ரம் பிரபு நடித்து இருக்கிறார். இந்தப் படத்துக்கு டாணாக் காரன் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். டைரக்டர் வெற்றிமாறனிடம் வடசென்னை, விசாரணை, அசுரன் ஆகிய படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்த தமிழ், இந்தப் படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார்.

டாணாக்காரன் பற்றி டைரக்டர் தமிழ் கூறுகிறார்:-

தமிழ்நாட்டில், 1997-ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தைக் கருவாகக் கொண்ட படம் இது. போலீஸ் வேலைக்குச் செல்லும் ஒரு இளைஞர், பயிற்சியின்போது சந்திக்கும் சம்பவங்களே கதை. இது, இந்திய சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத கதை.

51 நாட்கள் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடித்து விட்டோம். படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் முடிவடைந்தன.

படத்தில் விக்ரம் பிரபுவின் ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்து இருக்கிறார். லால் வில்லனாக வருகிறார். போஸ் வெங்கட், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்து இருக்கிறார். படத்தை மே மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்