பெங்களூரு

மின்கம்பத்தில் மோதிய டேங்கர் லாரி; டிரைவர் காயம்

பெங்களூருவில் மின்கம்பத்தில் டேங்கர் லாரி மோதியது.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களாவில் இருந்து தொட்டபள்ளாப்புரா நோக்கி நேற்று காலை ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரமாக இருந்த மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

மேலும் டிரைவருக்கும் பலத்த காயம் உண்டானது. விபத்து பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் நெலமங்களா-தொட்டபள்ளாப்புரா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை