தொழில்நுட்பம்

வாட்ஸ்அப்பில் ஸ்மார்ட் டெக்ஸ்ட் வசதி!

அடையாளம் காணப்படும் விவரங்களின் கீழ் புள்ளிக்கோடு தோன்றும்.

வாட்ஸ்அப் உரையாடல்களில் பகிரப்படும் தொலை பேசி எண்கள், தேதிகள், நேரம், மின்னஞ்சல் முகவரி கள், வீட்டு முகவரிகள் போன்ற விவரங்களைப் பயன் படுத்த இனி வேறு செயலிகளுக்குச் செல்ல வேண் டிய அவசியம் குறையவுள்ளது. இதற்காக 'ஸ்மார்ட் டெக்ஸ்ட் ஆக்ஷன்ஸ்' (Smart Text Actions) என்ற புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி வரு கிறது.

இந்த வசதி, உரையாடல்களில் இடம்பெறும் முக்கிய விவரங்களைத் தானாக அடையாளம் கண்டு. அவற் றுக்கு ஏற்ற செயல்களைப் பரிந்துரைக்கும். உதாரண மாக, ஒருவர் தொலைபேசி எண்ணைப் பகிர்ந்தால். அதைச் சேமிக்கவும். நகலெடுக்கவும் அல்லது அழைக்கவும் வழி காட்டும். தேதி, நேரம் குறிப்பிடப் பட்டிருந்தால், அதைத் தொலைபேசி நாட்காட்டியில் சேர்க்கும். முகவரியை வரைபடச் செயலியில் திறந்து வழியைக் கண்டறியும். மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு நேரடியாக மின்னஞ்சலும் அனுப்பலாம்.

அடையாளம் காணப்படும் விவரங்களின் கீழ் புள்ளிக்கோடு தோன்றும். அதைத் தொட்டால், செய்யக்கூடிய செயல்க ளுக்கான பட்டியல் திரையில் தெரியும். பரிந்துரைக்கப்படும் செயல்களைப் பயன்படுத்துவது கட்டாயமில்லை: வழக்கம் போல உரையாடலைத் தொடரலாம்.

SCROLL FOR NEXT