சினிமா துளிகள்

மனைவிக்கு மாதம் ரூ.8 லட்சம் ஜீவனாம்சம் வழங்க பிரபல நடிகருக்கு நீதிமன்றம் உத்தரவு

மனைவிக்கு மாதம் ரூ.8 லட்சம் ஜீவனாம்சம் வழங்க பிரபல நடிகருக்கு நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது.

தினத்தந்தி

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரித்விராஜ். இவர் தமிழில் புதுப்பேட்டை, பீஸ்ட், பாரீஸ் ஜெயராஜ் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். பிரித்விராஜுக்கும் விஜயவாடாவை சேர்ந்த ஸ்ரீலட்சுமி என்ற பெண்ணுக்கும் 1984-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இதையடுத்து பிரித்விராஜுக்கு எதிராக ஸ்ரீலட்சுமி விஜயவாடா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ''பிருத்விராஜ் சினிமாவில் நடிக்க முயற்சி செய்த காலங்களில் எனது பெற்றோர்தான் அவர் செலவுகளை எல்லாம் பார்த்துக் கொண்டனர். 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டார். இப்போது நான் பிறந்த வீட்டில் தான் இருக்கிறேன். இனிமேல் அவரோடு சேர்ந்து வாழ சாத்தியம் இல்லை. தற்போது சினிமாவிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து மாதத்துக்கு ரூ.30 லட்சம் வரை சம்பாதிக்கிறார். எனவே எனக்கு மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா பிரியதர்ஷினி நடிகர் பிரித்விராஜ் சொத்துக்கள் மற்றும் அவரது வருவாய் சம்பந்தப்பட்ட விவரங்களை பரிசீலித்து மனைவிக்கு மாதம் ரூ.8 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டார். இது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்